சிலிண்டர் வரிசையில் காத்திருந்த முதியவர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்
March 14, 2026

பஞ்சாப் மாநிலம் பர்னாலா அருகே சிலிண்டர் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 66 வயது முதியவர் பூஷன் குமார் மித்தல் மாரடைப்பால் உயிரிழந்தார். மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, கடந்த சில நாட்களாக மக்கள் சிலிண்டர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.
மளிகை கடை நடத்தி வந்த பூஷன் குமார், சிலிண்டருக்காக பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்த நிலையில் செஹ்னா பகுதியில் வரிசையில் நின்றபோது மயங்கி விழுந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். தற்போது வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ளது.