சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கும் சாமியார் அபிமுக்தேஸ்வரானந்தர்
February 23, 2026

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி வித்யா மடத்தின் சுவாமி அபிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி மற்றும் அவரது சீடர் முகுந்தானந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்த பிரயாக்ராஜ் நீதிமன்றம், இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னதாக காவல்துறை வழக்குப் பதிய மறுத்த நிலையில், நீதிமன்றத் தலையீட்டால் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மடத்தின் ஐந்தாவது மாடியில் வைத்து சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் புகாரில், நீதிமன்றம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டு முறையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஜுன்சி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.