சாமியார் வேடத்தில் வந்து 10 ஆண்டுகளாக பிரிந்திருந்த மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்

சாமியார் வேடத்தில் வந்து 10 ஆண்டுகளாக பிரிந்திருந்த மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்

செய்தி பிரிவு : தெற்கு டெல்லியின் நெப் சராய் பகுதியில் 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த மனைவியை, அவரது கணவர் பிரமோத் குமார் ஜா கொடூரமாக கொலை செய்துள்ளார். குடும்ப வன்முறை காரணமாக பிரிந்து சென்ற மனைவி கிரண் ஜா, தனது மகனுடன் வசித்து வந்தார். பீகாரின் முங்கர் மாவட்டத்திலிருந்து சாமியார் வேடத்தில் வந்த பிரமோத், குடும்பத்தினரை ஏமாற்றி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். புதன்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் சுத்தியலால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கொலையை கண்டு அப்பகுதியே அதிர்ச்சியில் உள்ளது. அதிகாலை 4 மணியளவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கிரண் ஜாவை அவரது மருமகள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தலைமறைவாக முயன்ற பிரமோத் குமார் ஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். நீண்ட கால குடும்ப தகராறே இந்த கொடூர சம்பவத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *