சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு தடை விதிக்கப்படலாம்

சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு தடை விதிக்கப்படலாம்

உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (வாடா) நிலுவைத் தொகையை அமெரிக்கா செலுத்தாததால், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. வாடாவின் செயல்பாடுகள் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து அமெரிக்க அரசு கேள்வி எழுப்பி நிதி வழங்க மறுத்து வருவதால், இந்த இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

இருப்பினும், இந்தத் தகவலை மறுத்துள்ள வாடா அமைப்பு, புதிய விதிகள் எதுவும் முந்தைய நிகழ்வுகளைப் பாதிக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் 2026 கால்பந்து உலகக்கோப்பை மற்றும் 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நிர்வாக வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் வரை நிதியை விடுவிக்கப் போவதில்லை என்பதில் அமெரிக்க அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *