சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை தவிர்க்க நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தியது மத்திய அரசு

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை தவிர்க்க நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தியது மத்திய அரசு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான நிலையைச் சமாளிக்க மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு தடையின்றி எரிவாயு கிடைப்பது உறுதி செய்யப்படும்.

இந்த உத்தரவின்படி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளை விட எல்பிஜி உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டை விட சாதாரண மக்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *