சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க அரசு அதிரடி நடவடிக்கை ஐந்து லட்சம் இண்டக்ஷன் அடுப்புகள் சந்தைக்கு வருகின்றன

சர்வதேச பதற்றங்களுக்கு மத்தியில் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்க மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. தேசிய மின்சார சமையல் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் நவீன இண்டக்ஷன் அடுப்புகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பொதுத்துறை நிறுவனமான இஇஎஸ்எல் மூலம் இந்த அடுப்புகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும். இந்த மின்சார அடுப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் சமையல் எரிவாயு செலவை விட சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஒரு லட்சம் அடுப்புகளுக்கு ஆர்டர் வழங்கப்பட்டு அவை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட உள்ளன. தற்போதைய கையிருப்பு தீர்ந்தவுடன் மேலும் ஐந்து லட்சம் அடுப்புகளை வாங்க புதிய டெண்டர் கோரப்படும். சர்வதேச அளவில் நிலவும் எரிவாயு விநியோக அழுத்தத்தை சமாளிக்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமையல் செலவு குறைவது மட்டுமின்றி சுற்றுச்சூழல் மாசுபாடும் பெருமளவில் குறையும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.