சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசு முக்கிய விளக்கம்

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசு முக்கிய விளக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு நாடு முழுவதும் தாராளமாக உள்ள நிலையில், எல்பிஜி சிலிண்டர் விநியோக நிலைமை கவலை அளிப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பெருநகரங்களில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களைப் பெறுவதில் நுகர்வோர் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். இருப்பினும், சுத்திகரிப்பு நிலையங்கள் முழு திறனுடன் இயங்குவதால் எரிபொருள் இறக்குமதிக்கு அவசியமில்லை என கூறப்பட்டுள்ளது.

மத்திய இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், குழாய் வழி எரிவாயு விநியோகம் தடையின்றி தொடர்வதாக உறுதி அளித்தார். வணிக ரீதியான நுகர்வோர் தற்காலிகமாக பிஎன்ஜி முறைக்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்பி பொதுமக்கள் பீதியில் அதிக அளவில் எரிவாயுவை சேமிக்க வேண்டாம் என்று அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *