சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பதிவிடும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் எச்சரித்துள்ளார். வேட்பாளர்கள் தொடர்பான விளம்பரங்களை உரிய அனுமதியின்றி பதிவிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்திய அவர், ஊடக கண்காணிப்பு குழு (MCMC) மூலம் சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் மொத்தம் 27.14 லட்சம் வாக்காளர்கள் மற்றும் 3571 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 182 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் வெப்காஸ்டிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணமின்றி ரூ. 50,000-க்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். தேர்தல் புகார்களுக்கு 1800250086 என்ற எண்ணை 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *