சபரிமலையில் பங்குனி மாத பூஜைக்காக நடை திறப்பு பக்தர்கள் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள்
March 14, 2026

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மற்றும் மீன மாத பூஜைகளுக்காக சனிக்கிழமை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் விரிவான பாதுகாப்பு மற்றும் தரிசன ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. மாதாந்திர பூஜைகள் நிறைவடைந்தவுடன் மார்ச் 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மார்ச் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாகத் தொடங்குகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக பம்பை நதியில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். தரிசனம் மற்றும் தங்குமிட முன்பதிவிற்கு ஆன்லைன் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.