கிழிந்த புடவையில் தொட்டில்: போலீஸ்காரர் செய்த செயல்… நெகிழ வைக்கும் வீடியோ!

கிழிந்த புடவையில் தொட்டில்: போலீஸ்காரர் செய்த செயல்… நெகிழ வைக்கும் வீடியோ!

மும்பை நடைபாதையில் ஒரு தாய் தனது குழந்தையை கிழிந்த பழைய புடவையில் கட்டப்பட்ட தொட்டிலில் தூங்க வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவலர் சுஷில் ஷிகாரே, திடீரென அந்தத் தொட்டிலைத் தூக்கி எறிந்தார். இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அதன் பின்னணியில் இருந்த காரணம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

மூங்கில் கம்புகளில் மிக ஆபத்தான நிலையில் குழந்தை ஊசலாடுவதைக் கண்ட அந்த காவலர், குழந்தையின் பாதுகாப்பைக் கருதி அவ்வாறு செய்துள்ளார். வெறும் கண்டிப்போடு நின்றுவிடாமல், தனது சொந்தப் பணத்தில் ஒரு புதிய நவீன தொட்டிலை வாங்கி வந்து அந்தத் தாய்க்கு பரிசளித்தார்.

காவல்துறையினரின் மனிதாபிமான முகத்தை வெளிப்படுத்தும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “ஆபத்துக் காலத்தில் தடியை மட்டும் தூக்குபவர் அல்ல போலீஸ், ஒரு பாதுகாவலனாகவும் இருப்பார்” என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். சீருடை அணிந்தவர்களின் இத்தகைய கனிவான செயல், சாமானிய மக்களுக்கு காவல்துறை மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *