கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு கலைஞர் பேருந்து முனைய ரயில் நிலையம் என பெயர் சூட்ட ஒப்புதல்

கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு கலைஞர் பேருந்து முனைய ரயில் நிலையம் என பெயர் சூட்ட ஒப்புதல்

கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையத்திற்கு ‘கலைஞர் பேருந்து முனைய ரயில் நிலையம்’ என பெயர் சூட்ட தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த முனையத்திற்கு ரயில் இணைப்பு வேண்டும் என்ற பயணிகளின் நீண்டகால கோரிக்கை இதன் மூலம் நிறைவேறுகிறது.

வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில் 3 நடைமேடைகளுடன் இந்த நிலையம் உருவாகி வருகிறது. கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் இந்த ரயில் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *