கியூஆர் கோட் ஸ்கேன் செய்யும் போது இதைக் கவனிக்காவிட்டால் உங்கள் வங்கி கணக்கு காலியாகும் அபாயம்

தற்போதைய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உலகில் கியூஆர் கோட் ஸ்கேன் செய்வது எளிதானது என்றாலும் அதில் மறைந்துள்ள மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடைகளில் ஸ்கேன் செய்வதற்கு முன் அந்த கியூஆர் கோட் மீது வேறு ஏதேனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள். ஸ்கேன் செய்த பிறகு திரையில் தோன்றும் பெயரும் கடையின் பெயரும் ஒன்றாக இருக்கிறதா என்று சரிபார்த்து பின் எண்ணை உள்ளிடவும். பணம் பெறுவதற்கு ஒருபோதும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அறிமுகமில்லாத செயலிகளைத் தவிர்த்து கூகுள் பே அல்லது போன் பே போன்ற நம்பகமான தளங்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று சைபர் நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் யுபிஐ பின் எண்ணைத் அவ்வப்போது மாற்றுவது மற்றும் வங்கியின் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவது அவசியம். ஏதேனும் மோசடி நடந்தால் உடனடியாக தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் செய்யவும். உங்களின் விழிப்புணர்வு மட்டுமே இத்தகைய டிஜிட்டல் திருட்டுகளில் இருந்து உங்களைக் காக்கும் சிறந்த வழியாகும்.