கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் பரிதாப உயிரிழப்பு அனாதையாக நின்ற குழந்தைகள்
March 13, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக ராஜகுமாரி என்ற பெண் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்டு பதறிய கணவர் சக்தி பரதன், மனைவியை மீட்கும் நோக்கில் துணிச்சலாக கிணற்றில் குதித்தார். ஆனால் நீச்சல் தெரியாத காரணத்தால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சிறிது நேரத்திலேயே ராஜகுமாரியும் நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டனர். ஒரே நாளில் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் இழந்து தவிக்கும் அந்த பிஞ்சு குழந்தைகளின் நிலை அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.