கிணறுகள் எப்போதும் வட்ட வடிவில் மட்டுமே இருப்பது ஏன் தெரியுமா இதன் பின்னால் உள்ள அறிவியல் ரகசியம்

பண்டைய காலம் முதல் இன்று வரை கிணறுகள் ஏன் சதுரமாகவோ அல்லது முக்கோணமாகவோ இல்லாமல் வட்ட வடிவில் மட்டுமே கட்டப்படுகின்றன என்பதற்கு பின்னால் ஒரு முக்கிய அறிவியல் காரணம் உள்ளது. நீர் நிலையில் இருக்கும்போது அதன் அழுத்தம் சுவர்களின் அனைத்துப் பக்கங்களிலும் சமமாக இருக்கும். கிணறு வட்ட வடிவில் இருந்தால் அந்த அழுத்தம் சுவர் முழுவதும் சீராகப் பரவுகிறது. இது கிணற்றின் கட்டமைப்பை நீண்ட காலத்திற்கு வலுவாக வைத்திருக்கிறது.
ஒருவேளை கிணறு சதுர வடிவில் இருந்தால் நீரின் அழுத்தம் அதன் நான்கு மூலைகளில் மட்டுமே அதிகப்படியாக இருக்கும். இதனால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு மண் சரிவு ஏற்படும் அபாயம் அதிகம். வட்ட வடிவில் மூலைகள் இல்லாததால் இடிந்து விழும் வாய்ப்பு மிகக் குறைவு. மேலும் நிலத்தில் ஆழமாகத் தோண்டும்போது சதுர வடிவத்தை விட வட்ட வடிவில் துளையிடுவது மிகவும் எளிதானது என்பதால் உலகெங்கிலும் கிணறுகள் வட்டமாகவே அமைக்கப்படுகின்றன.