காலையில் எழுந்தவுடன் உடலில் தோன்றும் இந்த 3 அறிகுறிகள் புற்றுநோயின் எச்சரிக்கையாக இருக்கலாம்

காலையில் எழுந்தவுடன் உடலில் தோன்றும் இந்த 3 அறிகுறிகள் புற்றுநோயின் எச்சரிக்கையாக இருக்கலாம்

இன்றைய பரபரப்பான சூழலில் உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களை நாம் அலட்சியப்படுத்துகிறோம். ஆனால் காலையில் எழுந்தவுடன் உடல் வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் புற்றுநோயின் ஆரம்ப எச்சரிக்கையாக இருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. நீண்ட நாட்களாக காலையில் தொண்டை புண், குரலில் மாற்றம் அல்லது உணவை விழுங்குவதில் சிரமம் இருந்தால் அது நுரையீரல் அல்லது தொண்டை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனை சாதாரண சளி என்று நினைத்து விடக்கூடாது.

இரவில் நன்றாக தூங்கிய பிறகும் காலையில் தொடர்ந்து சோர்வாக உணர்ந்தால், அது இரத்த புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும், காலையில் மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம் அல்லது மலத்துடன் இரத்தம் வெளியேறுவது குடல் புற்றுநோயைக் குறிக்கலாம். இத்தகைய மாற்றங்களை சாதாரண உடல்நலக் குறைவு என்று கருதாமல், இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது உயிர் காக்க உதவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *