கவனத்திற்கு! டிசம்பர் 15-க்குள் இந்த வேலையை முடிக்காவிட்டால் பெரும் அபராதம்

நடப்பு காலாண்டிற்கான அட்வான்ஸ் டாக்ஸ் (Advance Tax) அல்லது முன்கூட்டிய வரி செலுத்துவதற்கான கடைசித் தேதி வரும் டிசம்பர் 15 ஆகும். சம்பளம் தவிர, மூலதன ஆதாயம் (Capital Gain), வட்டி, டிவிடென்ட் அல்லது வணிக வருமானம் போன்ற பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் ஈட்டுவோர், டிடிஎஸ் (TDS) பிடித்தம் செய்யப்பட்ட பிறகும், மொத்த வரிப் பொறுப்பு ₹10,000-க்கும் அதிகமாக இருந்தால், முன்கூட்டியே வரி செலுத்துவது கட்டாயமாகும். வரி செலுத்துவோர் ஆண்டின் இறுதியில் பெரிய தொகையை அபராதமாக செலுத்துவதையும், வட்டி செலுத்த வேண்டியதையும் தவிர்க்க, இந்த குறிப்பிட்ட தேதிக்குள் தங்கள் தோராயமான வரித் தவணையைச் செலுத்த வேண்டும்.
இந்த அட்வான்ஸ் டாக்ஸை ஆண்டு முழுவதும் நான்கு தவணைகளில் செலுத்த வேண்டும், இதில் டிசம்பர் 15 என்பது மூன்றாவது தவணைக்கான காலக்கெடு ஆகும். மூத்த குடிமக்களுக்கு (வியாபாரம் அல்லது தொழில் மூலம் வருமானம் இல்லாதவர்கள்) இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தவணையை செலுத்தத் தவறினால், தவறவிட்ட தவணைத் தொகைக்கு மாதத்திற்கு 1% வட்டி அல்லது அபராதம் விதிக்கப்படும். எனவே, வரி செலுத்துவோர் தங்கள் நிதிப் பொறுப்புகளை நிறைவேற்ற இந்தக் முக்கியமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்.