கரூரில் ரயில்வே தண்டவாளத்தில் சிக்கிய கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி 18 மாணவர்கள் படுகாயம்
March 14, 2026

கரூர் மாவட்டம் வெள்ளியனையில் தனியார் கல்லூரி பேருந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டது. அப்போது புலியூர் சிமெண்ட் ஆலைக்கு ஜல்லி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் பேருந்தின் மீது பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 18 மாணவர்கள் காயமடைந்தனர்.
விபத்தில் சிக்கிய மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எம்.பி. ஜோதிமணி மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.