கரூரில் தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து 18 பேர் காயம்

கரூரில் தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து 18 பேர் காயம்

கரூர் மாவட்டம் வெள்ளியணையில் தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த நேரத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததா அல்லது கவனக்குறைவால் விபத்து நடந்ததா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *