கருப்பை வாய் புற்றுநோயை ஒழிக்க மத்திய அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு

கருப்பை வாய் புற்றுநோயை ஒழிக்க மத்திய அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க, 14 வயது சிறுமிகளுக்கு இலவசமாக எச்பிவி (HPV) தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 2024 பட்ஜெட் வாக்குறுதிப்படி, அடுத்த சில நாட்களில் இந்த நாடு தழுவிய இயக்கம் தொடங்க உள்ளது. 2027 ஆம் ஆண்டிற்குள் 2.6 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் ஒரு டோஸ் சுமார் ₹3,927 விலையுள்ள ‘கார்டசில்’ தடுப்பூசி, இந்த அரசு திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, ஒரு டோஸ் தடுப்பூசியே நீண்ட கால பாதுகாப்பை அளிக்கும். இந்த முயற்சி எதிர்காலத்தில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளைப் பெருமளவு குறைக்க உதவும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *