கனடாவில் இந்திய தம்பதியினர் மீது இனவெறி தாக்குதல், ஆபாச சைகைகளால் அவமானம்

கனடாவில் இந்திய தம்பதியினர் மீது இனவெறி தாக்குதல், ஆபாச சைகைகளால் அவமானம்

கனடாவில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் வாகன நிறுத்துமிடத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் மீது பகிரங்கமாக இனவெறி தாக்குதல் மற்றும் வசைபாடியதாகக் கூறப்படுகிறது. 18 வயது இளைஞர்கள் குழு ஒன்று, தம்பதியினரை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று கேலி செய்து ஆபாச சைகைகளைச் செய்துள்ளனர். மேலும், அவர்களை கொலை செய்வதாகவும் மிரட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், கடுமையான கண்டனம் மற்றும் சீற்றம் எழுந்துள்ளது.

பீட்டர்பரோவில் நடந்த இந்தச் சம்பவத்தில், இளைஞர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. காணொளியில், இளைஞர்கள் இந்திய தம்பதியினரை அவமானப்படுத்தும் விதமாகப் பேசி, அருவருக்கத்தக்க சைகைகளைச் செய்கின்றனர். ஆஸ்திரேலியா மற்றும் மெக்சிகோ போன்ற பல நாடுகளிலும் இதுபோன்ற இனவெறி சம்பவங்கள் அதிகரித்து வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *