கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு மத்திய அரசைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் அதிரடி போராட்டம்
March 15, 2026

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் சூழலால் தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வணிக ரீதியிலான சிலிண்டர் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த எரிவாயு தட்டுப்பாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கின்றன. சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்ற உள்ளனர்.