கடன் தீர மனைவியை நண்பர்களுடன் படுக்கையை பகிருமாறு கட்டாயப்படுத்திய கணவன் மீது வழக்கு

கடன் தீர மனைவியை நண்பர்களுடன் படுக்கையை பகிருமாறு கட்டாயப்படுத்திய கணவன் மீது வழக்கு

உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மீது பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்துவதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையான மதுராவைச் சேர்ந்த அந்த நபர், தனது கடன்களை அடைப்பதற்காக மனைவியை நண்பர்களுடன் உடல் உறவு கொள்ள வற்புறுத்தியுள்ளார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு அந்தப் பெண் தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கணவர் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து மனைவியை அவர்களுடன் தனியாக விட்டுச் சென்றதாகவும், இது குறித்து முறையிட்டபோது அவரை தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுமை இழந்த அந்தப் பெண் தனது தாய் வீட்டிற்குத் தப்பிச் சென்று தற்போது காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள மகளிர் போலீசார், தலைமறைவாக உள்ள கணவனை தேடி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *