ஒரு கப் காபி வாங்கி உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறிய இளம்பெண்ணின் வியக்க வைக்கும் சம்பவம்
February 24, 2026

நாட்டிங்ஹாமைச் சேர்ந்த 29 வயதான சோஃபி டவுனிங் கடந்த பிப்ரவரி 12 அன்று ஒரு காபி கடையில் 10 பவுண்ட் கிஃப்ட் கார்டைப் பயன்படுத்தியபோது அவரது ரசீதில் 63 குவாட்ரில்லியன் பவுண்டுகளுக்கு மேல் இருப்பு காட்டப்பட்டது. இந்தத் தொகை உலகப் பணக்காரர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பை விட சுமார் 1,00,000 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் செலுத்தும் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நம்பமுடியாத தொகை ரசீதில் பதிவாகியுள்ளது. அந்த காபி ஷாப் நிர்வாகம் இது ஒரு தற்காலிக தவறு என்று பின்னர் உறுதிப்படுத்தியது. இருப்பினும் காகித ரசீதில் ஒரு கணமாவது உலகின் பெரும் பணக்காரப் பெண்ணாக மாறிய இந்த விசித்திரமான செய்தி தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.