ஒடிசாவில் பயங்கரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை பெண்கள் கோரமாக வெட்டிக்கொலை
March 13, 2026

ஒடிசா மாநிலம் தேவ்கர் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக 52 வயதான ரமேஷ் கரியா என்பவர் தனது மனைவி, மருமகள் மற்றும் 6 வயது பேத்தியை கனமான ஆயுதத்தால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். உயிருக்கு பயந்து மருமகளின் அறைக்குள் தப்பியோடிய மனைவியையும் துரத்திச் சென்று அவர் தாக்கியதாகத் தெரிகிறது.
வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய மகன் தீரன், தனது தாய், மனைவி மற்றும் குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார். இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக உள்ள ரமேஷ் கரியாவைத் தேடி வரும் போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.