ஐபிஎல் 2026 கோப்பையை வெல்லுமா ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்

கடந்த சீசனில் 6 ரன்களில் கோப்பையை நழுவவிட்ட பஞ்சாப் கிங்ஸ், இந்த முறை ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் தீவிரமாக களம் இறங்குகிறது. பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா ஜோடியின் அதிரடி தொடக்கம் அணிக்கு பெரும் பலமாக கருதப்படுகிறது. பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் சாஹல் கூட்டணி எதிரணிகளை மிரட்ட காத்திருக்கும் நிலையில், கடந்த முறையைப் போலவே மிடில் ஆர்டர் பேட்டிங் இப்போதும் ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது.
நேகல் வதேரா மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரின் சீரற்ற ஆட்டம் அணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும். இக்கட்டான சூழலில் இன்னிங்ஸை தாங்கிப் பிடிக்கக்கூடிய நிலையான பேட்டர்கள் இல்லாதது பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளது. இருப்பினும், கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிளே-ஆஃப் சென்ற உத்வேகத்துடன் இந்த முறை முதல் முறையாக கோப்பையை கைப்பற்ற பஞ்சாப் அணி போராடும்.