ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பின்னடைவு தரும் வகையில் ஆலோசகர் பதவியை துறந்தார் கெவின் பீட்டர்சன்

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பின்னடைவு தரும் வகையில் ஆலோசகர் பதவியை துறந்தார் கெவின் பீட்டர்சன்

ஐபிஎல் 19-வது சீசன் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் அறிவித்துள்ளார். இந்தப்பணிக்குத் தேவையான நேரத்தை ஒதுக்க முடியாத காரணத்தால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆலோசகராக நியமிக்கப்பட்ட பீட்டர்சன் விலகுவது அந்த அணியின் பயிற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகினாலும் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பீட்டர்சன் வலம் வரவுள்ளார். உலகின் சிறந்த டி20 தொடரான ஐபிஎல்-ஐ ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் டெல்லி வீரர்களுக்கு தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்காக விளையாடிய அனுபவம் கொண்ட பீட்டர்சன் தற்போது வர்ணனையாளர் அறையில் இருந்து ரசிகர்களை உற்சாகப்படுத்த தயாராகிவிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *