ஐசிசி விதிகளில் மாற்றம் காயம் ஏற்பட்டால் மாற்று வீரர் அனுமதி

ஐசிசி விதிகளில் மாற்றம் காயம் ஏற்பட்டால் மாற்று வீரர் அனுமதி

கிரிக்கெட்டில் கடுமையான காயம் ஏற்பட்ட போதிலும் மாற்று வீரர் அனுமதிக்கப்படாத ஐசிசியின் நீண்டகால விதியில் மாற்றம் வரவுள்ளது. ரிஷப் பண்ட் கால் உடைந்த நிலையிலும் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது, இது பரவலான விமர்சனங்களை எழுப்பியது. சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி போன்ற ஜாம்பவான்கள் இந்த விதியை மாற்ற கோரினர். ஐசிசி கிரிக்கெட் குழு இந்த விவாதித்துள்ளது, விரைவில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படலாம். புதிய விதியின்படி, மூளை அதிர்ச்சிக்கு மட்டுமல்லாமல், எந்தவொரு கடுமையான காயத்திற்கும் முழு மாற்று வீரரை களமிறக்க அனுமதி வழங்கப்படும், அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டையும் செய்ய முடியும். இந்த மாற்றம் முதலில் ஆறு மாத காலத்திற்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு, பின்னர் சர்வதேச போட்டிகளில் அமல்படுத்தப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *