ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதி அமல் வரி செலுத்துவோருக்கு நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு
March 28, 2026

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வருமான வரி விதி 2026, வரும் ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. 1961 ஆம் ஆண்டின் பழைய விதிகளுக்கு மாற்றாக கொண்டுவரப்படும் இந்த புதிய முறை, வரி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் டிஜிட்டல் முன்னேற்றத்தையும் உறுதி செய்யும். இதன் மூலம் வரி தொடர்பான புகார்கள் மற்றும் சிக்கல்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை என்றாலும், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நிதியமைச்சர் நீட்டித்துள்ளார். இதன்படி, ஆகஸ்ட் 31 வரை ஐடிஆர் படிவங்களை சமர்ப்பிக்கலாம். புதிய வரி கொள்கையின்படி ஆண்டு வருமானம் 4 லட்சம் ரூபாய் வரை இருப்பவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.