எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு

எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த மேலும் 3 மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர் அவர்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்ட 7 மீனவர்களும் ஊர்க்காவல்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் நீதிபதி உத்தரவின் பேரில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவ குடும்பங்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *