ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து விரட்டியடிக்க அமித் ஷா அதிரடி திட்டம்
March 15, 2026

காங்கிரஸ் கட்சி ஊடுருவலை ஒரு சாதாரண விஷயமாக மாற்றியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஸ்ஸாமில் குற்றம் சாட்டினார். பாஜக அரசு இதனை ஒருபோதும் அனுமதிக்காது என்றும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் ஊடுருவல்காரர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அஸ்ஸாம் வன்முறை மாநிலமாக இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், பாஜக அமைதியை நிலைநாட்டியுள்ளதாகக் கூறினார். வரும் தேர்தலில் பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் மாநிலத்தில் ஊடுருவல் முற்றிலும் ஒழிக்கப்படும் என அவர் பேசினார். ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவதை காங்கிரஸ் தடுப்பது அவர்களின் அரசியல் சுயநலமே என்று அவர் விமர்சித்தார்.