உலகின் மிக உயரமான இரயில் பாலத்தில் சீறிய இந்திய இராணுவ டாங்கிகள்

உலகின் மிக உயரமான இரயில் பாலத்தில் சீறிய இந்திய இராணுவ டாங்கிகள்

உலகின் மிக உயரமான இரயில் பாலம் வழியாக கனரக டாங்கிகள் மற்றும் பீரங்கிகளை ஏற்றிச் சென்ற இராணுவ சிறப்பு இரயில் காஷ்மீரை அடைந்து சாதனை படைத்துள்ளது. ரியாசி மாவட்டத்தின் கவுரி வழியாக நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் இராணுவத்தின் தளவாட வலிமையை நிரூபித்துள்ளது.

உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா இரயில் இணைப்புத் திட்டம் மூலம் இனி வடக்கெல்லையில் இராணுவ தளவாடங்களை விரைவாகக் கொண்டு செல்ல முடியும். மோசமான காலநிலையிலும் தடையின்றி எல்லைப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள இது வழிவகை செய்யும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *