உலகக்கோப்பை மற்றும் தேநீர் கோப்பையுடன் பிசிபி தலைவருக்கு வருண் சக்ரவர்த்தி கொடுத்த பதிலடி

சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ள நிலையில், வருண் சக்ரவர்த்தியின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது. உலகக்கோப்பைக்கு அருகில் அமர்ந்து தேநீர் அருந்துவது போன்ற அவரது புகைப்படம், பிசிபி தலைவர் மோசின் நக்வியுடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட கோப்பை சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. நக்வியின் பழைய விமர்சனங்களுக்கு இந்த வெற்றியின் மூலம் வருண் தக்க பாடம் புகட்டியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த தொடரில் வருண் சக்ரவர்த்தி மற்றும் பும்ரா ஆகிய இருவரும் தலா 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தனர். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் வருண் சற்று அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும், இக்கட்டான நேரங்களில் அவர் எடுத்த விக்கெட்டுகள் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. உலகக்கோப்பை கொண்டாட்டங்களுக்கு மத்தியில், வரவிருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வருண் தனது பழைய ஃபார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.