உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் ஆபத்தான ஏஐ செயலிகள்

உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் ஆபத்தான ஏஐ செயலிகள்

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஏஐ செயலிகள் மூலம் லட்சக்கணக்கான பயனர்களின் தரவுகள் கசிந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வீடியோ ஏஐ ஆர்ட் ஜெனரேட்டர் செயலி மூலம் சுமார் 82 லட்சம் கோப்புகள் மற்றும் 12 டிபி அளவிலான தனிப்பட்ட தரவுகள் கசிந்துள்ளன. கிளவுட் ஸ்டோரேஜில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடே இந்த மாபெரும் தரவு திருட்டிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஐடி மெரிட் என்ற செயலி மூலம் பயனர்களின் கேஒய்சி விவரங்களும் கசிந்துள்ளதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதில் பயனர்களின் அடையாள அட்டைகள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளிநாட்டினருக்கு கிடைக்கும் அபாயம் உள்ளது. முன்பின் தெரியாத செயலிகளை பதிவிறக்கம் செய்யும் முன் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது அவசியம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *