ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்பதால் இந்தியர்கள் உடனடியாக வெளியேற தூதரகம் அதிரடி உத்தரவு

ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்பதால் இந்தியர்கள் உடனடியாக வெளியேற தூதரகம் அதிரடி உத்தரவு

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்பதால் இந்தியர்களின் பாதுகாப்பை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிறப்பு உதவி எண்களை தூதரகம் அறிவித்துள்ளதுடன் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா ஏற்கனவே தனது போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை நிலைநிறுத்தி தாக்குதலுக்கு தயாராக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் அங்குள்ள இந்தியர்கள் போராட்டங்கள் நடக்கும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்பான இடங்களுக்கு திரும்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *