ஈரான் போர் பதற்றத்தால் எகிறும் கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்தது மத்திய அரசு

ஈரான் போர் பதற்றத்தால் எகிறும் கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்தது மத்திய அரசு

சர்வதேச சந்தையில் நிலவும் ஈரான் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்களைப் பாதுகாக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டு தற்போது ரூ.3 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு முக்கிய முடிவாக டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழலில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கவும் இந்த வரி குறைப்பு உதவும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை தாறுமாறாக உயர்வதைத் தவிர்க்க எடுக்கப்பட்ட இந்த துணிச்சலான முடிவு வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் மற்ற நாடுகளின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *