ஈரானின் புதிய உச்ச தலைவர் மஜ்தபா கமேனி கோமா நிலையில் இருக்கிறாரா பரவும் பரபரப்புத் தகவல்கள்
March 13, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள மஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை மூலம் அவரது ஒரு கால் அகற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்லீரல் மற்றும் வயிற்றில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக அவர் தெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 முதல் அவர் பொதுவெளியில் தோன்றாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மார்ச் 8 அன்று நாட்டின் உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற பிறகும் அவர் மக்களிடையே நேரடியாக உரையாற்றவில்லை. அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இல்லாத நிலையில், இந்த மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.