ஈராக்கில் அமெரிக்க ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பணியாளர்கள் உயிரிழப்பு
March 13, 2026

ஈராக்கின் மேற்கு மாகாணத்தில் வியாழக்கிழமை அன்று அமெரிக்க ராணுவத்தின் கேசி-135 எரிபொருள் நிரப்பும் விமானம் விழுந்து நொறுங்கியது. ஈரான் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் பணியில் இது ஈடுபட்டிருந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களில் நான்கு பேர் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், இது திட்டமிட்ட தாக்குதல் அல்ல என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போயிங் 707 வடிவமைப்பில் உருவான இந்த வகை விமானங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க விமானப்படையில் முக்கிய பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.