இரண்டாவது திருமணத்திற்கு சாங்கியங்கள் அவசியம் என கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
March 16, 2026

திருமணமான நபர் மற்றொரு பெண்ணுடன் வாழ்வது அல்லது லிவ்-இன் உறவில் இருப்பது இருதார மணம் ஆகாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முறையான சடங்குகளுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அது சட்டப்படி குற்றமாகும் என்று நீதிபதி ஆர். நடராஜ் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
தன் கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்கிறார் என்று ஒரு பெண் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. வெறும் உறவில் இருப்பதை திருமணமாகக் கருத முடியாது என்றும், இந்திய தண்டனைச் சட்டம் 494-வது பிரிவு இதற்குப் பொருந்தாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் கணவர் மற்றும் அவரது மகன்கள் மீதான புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.