இன்ஸ்டாகிராம் கணக்கை நிரந்தரமாக இழக்க நேரிடும் இந்த 5 தவறுகளை உடனே தவிர்க்கவும்

இன்ஸ்டாகிராம் கணக்கை நிரந்தரமாக இழக்க நேரிடும் இந்த 5 தவறுகளை உடனே தவிர்க்கவும்

இன்ஸ்டாகிராம் தளத்தில் சிறிய கவனக்குறைவு கூட உங்கள் கணக்கை நிரந்தரமாக முடக்கக்கூடும். குறிப்பாக தேர்டு பார்ட்டி ஆப் மூலம் ஃபாலோயர்களை அதிகரிப்பது, மற்றவர்களின் வீடியோக்களை அனுமதியின்றி பதிவிட்டு பதிப்புரிமை விதிகளை மீறுவது மற்றும் தடைசெய்யப்பட்ட ஹேஷ்டேக்குகளை பயன்படுத்துவது போன்ற செயல்கள் ஆபத்தானவை.

வெறுப்பு பேச்சு, ஆபாசமான பதிவுகள் அல்லது ஸ்பேமிங் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உங்கள் கணக்கு நீக்கப்படும். எனவே உங்கள் கணக்கைப் பாதுகாக்க இன்ஸ்டாகிராமின் விதிமுறைகளைப் பின்பற்றுவதுடன், சந்தேகத்திற்கிடமான செயலிகளைத் தவிர்ப்பது அவசியமாகும். மீறினால் மீண்டும் பெற முடியாத அளவிற்கு கணக்கு முடக்கப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *