இன்டர்நெட் டேட்டாவுக்கு தனி வரி, மத்திய அரசு தீவிர ஆலோசனை

இன்டர்நெட் டேட்டாவுக்கு தனி வரி, மத்திய அரசு தீவிர ஆலோசனை

இந்தியாவில் டேட்டா பயன்பாட்டிற்குத் தனி வரி விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்மட்டக் கூட்டத்தில், வருவாயைப் பெருக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. குறைந்த விலையில் டேட்டா கிடைக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ள நிலையில், இந்த புதிய வரி அமலானால் இணையச் சேவை விலை உயர வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக செப்டம்பர் 2026-க்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கத் தொலைத்தொடர்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு ஜிபி டேட்டாவுக்கு ஒரு ரூபாய் வரி விதித்தால் கூட, அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ₹22,900 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். இதனால் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை எளியோரின் மொபைல் ரீசார்ஜ் கட்டணம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது இது ஆரம்பகட்ட ஆலோசனையில் மட்டுமே உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *