இந்திய வான்படையின் ஜாகுவார் போர் விமானங்களை நவீனமயமாக்க பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி முடிவு

இந்திய வான்படையின் ஜாகுவார் போர் விமானங்களை நவீனமயமாக்க பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி முடிவு

இந்திய வான்படையின் 74 ஜாகுவார் போர் விமானங்களை உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் நவீனமயமாக்க பாதுகாப்பு அமைச்சகம் டெண்டர் கோரியுள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், பழைய ஏவுகணைகளுக்குப் பதிலாக அடுத்த தலைமுறை ஏவுகணைகள் இதில் பொருத்தப்படும். மேலும், பைலட்டுகள் தலை அசைவிலேயே இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வகையில் நவீன ஹெல்மெட் மவுண்டட் டிஸ்ப்ளே சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அம்பாலா, ஜாம்நகர் மற்றும் கோரக்பூர் ஆகிய முக்கிய விமானப்படை தளங்களில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்த மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தொழில்நுட்பப் பரிசோதனை முடிந்த பிறகு, இவை எதிரிகளை எதிர்கொள்வதில் கூடுதல் பலம் பெறும். இந்த தசாப்தத்தின் இறுதி வரை ஜாகுவார் விமானங்கள் தனது ஆதிக்கத்தைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் வரும் மார்ச் 25 அன்று நடைபெறவுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *