இந்திய வரலாற்றில் முதல்முறை தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்க எதிர்க்கட்சிகள் அதிரடி திட்டம்

இந்திய வரலாற்றில் முதல்முறை தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்க எதிர்க்கட்சிகள் அதிரடி திட்டம்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளன. திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஒருவரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரைவு அறிக்கை, இந்தியா கூட்டணியின் ஒருமித்த ஆதரவுடன் இந்த வார இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளது. ஒரு தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் முதல் தீர்மானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. மக்களவையில் நூறு அல்லது மாநிலங்களவையில் ஐம்பது உறுப்பினர்களின் கையெழுத்தைப் பெற்று இத்தீர்மானத்தை முன்னெடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் தொடர்பாக மம்தா பானர்ஜி தெரிவித்து வந்த தொடர் புகார்களின் பின்னணியில் இந்த அதிரடி நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *