இந்திய மகளிர் ஹாக்கி அணியில் திடீர் திருப்பம்! தலைமை பயிற்சியாளர் ராஜினாமா

இந்திய மகளிர் ஹாக்கி அணியில் திடீர் திருப்பம்! தலைமை பயிற்சியாளர் ராஜினாமா

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங், தனிப்பட்ட காரணங்களைக் குறிப்பிட்டு உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2024 ஏப்ரலில் பொறுப்பேற்ற இவர், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் வரை அணியுடன் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரது இந்த திடீர் விலகல் தேசிய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும், ஹரேந்திர சிங் தனது அறிக்கையில், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாகவும், ஆனால் தனது ஆதரவு எப்போதும் இந்திய ஹாக்கிக்கு இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஹாக்கி இந்தியா வட்டாரங்களின்படி, அணியின் சமீபத்திய ஏமாற்றமளிக்கும் செயல்பாடு மற்றும் வீரர்களின் உடல் தகுதி தொடர்பான சிக்கல்களே இந்த முடிவுக்கு முக்கிய காரணம். கடந்த ஓராண்டில் அணியின் ஆட்டம் திருப்திகரமாக இல்லை; 2024-25 FIH ப்ரோ லீக்கில், இந்தியா 16 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, ஒன்பது அணிகள் கொண்ட அட்டவணையில் கடைசி இடத்தைப் பிடித்தது. ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற முடியாமல் போனது. இவருக்குப் பதிலாக, டோக்கியோ ஒலிம்பிக்கில் அணிக்கு வழிகாட்டிய முன்னாள் பயிற்சியாளர் ஸ்வோர்ட் மரைன் மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக வரக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *