இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தேசத்துரோகமா மோடி அரசு மீது ராகுல் காந்தி கடும் தாக்குதல்
March 9, 2026

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்தார். இந்த ஒப்பந்தம் நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் என்றும், அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து மத்திய அரசு விவசாயம், எரிசக்தி மற்றும் தரவுப் பாதுகாப்பை அடகு வைத்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த ஒப்பந்தத்தால் சிறு விவசாயிகள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஈடுகட்ட முடியாத பாதிப்புகளைச் சந்திக்கும் என்று ராகுல் எச்சரித்தார். மேலும், கேரளாவில் யுடிஎஃப் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தப்படவுள்ள பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் அவர் இந்தப் பிரச்சாரத்தில் விரிவாக எடுத்துரைத்தார்.