இந்தியா-பாகிஸ்தான் மோதலில் வங்கதேசத்திற்கு ஆபத்தா? நக்வியின் பேச்சால் பரபரப்பு!

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடாமல் இருந்திருந்தால், அது வங்கதேசத்தின் கிரிக்கெட் எதிர்காலத்தைப் பாதித்திருக்குமா? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியின் சமீபத்திய கருத்து கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணித்திருந்தால், 2028 மற்றும் 2031 ஆகிய ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி தொடர்களை நடத்தும் உரிமையை வங்கதேசம் இழந்திருக்கும் என நக்வி தெரிவித்துள்ளார். அண்டை நாடான வங்கதேசத்தை ஐசிசியின் கடும் நடவடிக்கையிலிருந்து காப்பாற்றவே, தாங்கள் இந்தியாவுடன் விளையாடச் சம்மதித்ததாக அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் இந்த முடிவால் தற்காலிகமாகச் சட்ட சிக்கல்கள் தவிர்க்கப்பட்டாலும், சர்வதேச கிரிக்கெட் அரசியலில் வங்கதேசத்தின் மீதான இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.