இந்தியா சீனா இடையே இனி மோதல் இல்லையா வெளியுறவு அமைச்சர் வாங் யி கொடுத்த முக்கிய அப்டேட்

இந்தியா சீனா இடையே இனி மோதல் இல்லையா வெளியுறவு அமைச்சர் வாங் யி கொடுத்த முக்கிய அப்டேட்

இந்திய-சீன உறவு தற்போது சரியான பாதையில் பயணித்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பெய்ஜிங்கில் தெரிவித்துள்ளார். இந்திய தூதர் பிரதீப் ராவத்தின் பிரிவு உபசார விழாவில் பேசிய அவர், இரு நாடுகளுக்கு இடையிலான கருத்து வேற்றுமைகளை விட பரஸ்பர ஒத்துழைப்பே முக்கியமானது என்றார். வளர்ந்து வரும் இரு பொருளாதார நாடுகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் நவீனமயமாக்கல் சாத்தியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2020 எல்லை மோதலுக்குப் பிறகு, கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் நேரடி விமான சேவை தொடக்கம் போன்ற நடவடிக்கைகள் உறவை மேம்படுத்தியுள்ளன. பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்புகள் மற்றும் அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் இந்த நெருக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இரு நாடுகளும் போட்டி நாடுகளாக இல்லாமல் சிறந்த கூட்டாளிகளாகத் தொடர சீனா விரும்புவதாகவும், இது ஆசிய பிராந்தியத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *