இந்தியாவை தப்பவிட்டு உலகக்கோப்பையை தாரைவார்த்த தென்னாப்பிரிக்கா முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் காட்டம்
March 14, 2026

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வெளியேற்றும் வாய்ப்பை தென்னாப்பிரிக்கா தவறவிட்டதாக மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகளை தென்னாப்பிரிக்கா வீழ்த்தியிருக்காவிட்டால், இந்தியாவின் அரையிறுதி கனவு அப்போதே முடிந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தவறான முடிவால் தென்னாப்பிரிக்காவை தொடரின் ‘முட்டாள் அணி’ என அவர் சாடியுள்ளார்.
ஒரு தொடரில் சாம்பியனாக வேண்டுமென்றால் பலமான எதிரணியை தந்திரமாக ஆரம்பத்திலேயே வெளியேற்ற வேண்டும் என்று வாகன் கூறினார். தென்னாப்பிரிக்கா அளித்த அந்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியா கோப்பையை வென்ற நிலையில், தென்னாப்பிரிக்கா அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.