ஆஸ்கர் 2026 விருதுகளை அள்ளிய சின்னர்ஸ் மற்றும் அவதார் ஒரு பார்வை
March 16, 2026

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கோலாகலமாகத் தொடங்கிய 98-வது அகாடமி விருது விழாவில் ‘சின்னர்ஸ்’ மற்றும் ‘அவதார் ஃபையர் அண்ட் ஆஷ்’ திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சிறந்த அசல் திரைக்கதை மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என பல பிரிவுகளில் ‘சின்னர்ஸ்’ முத்திரை பதித்துள்ளது. அத்துடன் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதை ஜேம்ஸ் கேமரூனின் அவதார் வென்றுள்ளது.
மேலும் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ படத்திற்காக சீன் பென் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார். நார்வே நாட்டின் ‘சென்டிமென்டல் வேல்யூ’ சிறந்த சர்வதேசத் திரைப்படமாகத் தேர்வானது. ‘மிஸ்டர் நோபடி அகெய்ன்ஸ்ட் புதின்’ சிறந்த ஆவணப்படத்திற்கான விருதைத் தட்டிச் சென்று உலக கவனத்தை ஈர்த்துள்ளது.