ஆரோக்கியம் என நினைத்து சாப்பிடும் இந்த உணவுகள் உங்கள் உடலின் முக்கிய உறுப்புகளை சிதைக்கலாம் எச்சரிக்கை

ஆரோக்கியம் என நினைத்து சாப்பிடும் இந்த உணவுகள் உங்கள் உடலின் முக்கிய உறுப்புகளை சிதைக்கலாம் எச்சரிக்கை

நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் சில உணவுகள் மெல்ல மெல்ல நமது உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்கின்றன. அதிகப்படியான மது அருந்துதல் கல்லீரலை பாதித்து சிரோசிஸ் போன்ற நோய்களை உண்டாக்குகிறது. அதேபோல் பொரித்த உணவுகளும் அதிக உப்பும் இதய ஆரோக்கியத்திற்கு பெரும் எதிரியாக மாறி இரத்த அழுத்தத்தை உயர்த்துகின்றன. அளவுக்கு அதிகமான சர்க்கரை பயன்பாடு கண்களின் பார்வைத்திறனை பாதிப்பதோடு நீரிழிவு நோயாளிகளுக்கு பார் இழப்பு அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள சல்பேட் நுரையீரலில் எரிச்சலை உண்டாக்கி சுவாசப் பிரச்சனைகளைத் தூண்டுகிறது. அதிக உப்பு சிறுநீரகத்தின் செயல்பாட்டை முடக்கி இரத்தத்தை சுத்திகரிப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. எனவே இந்த ஆபத்தான உணவுகளைத் தவிர்த்து பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். முறையான உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியுமே உறுப்புகளைப் பாதுகாத்து நீண்ட ஆயுளை உறுதி செய்யும் சிறந்த வழியாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *