அவிநாசியில் எல் முருகன் போட்டி தமிழக துணை முதல்வர் பதவியை குறிவைக்கிறதா பாஜக

அவிநாசியில் எல் முருகன் போட்டி தமிழக துணை முதல்வர் பதவியை குறிவைக்கிறதா பாஜக

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவிநாசி தனித் தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் போட்டியிடுவார் என பாஜக தலைமை அறிவித்துள்ளது. கடந்த தேர்தல்களில் பின்னடைவை சந்தித்திருந்தாலும், இந்த முறை அவரை களமிறக்குவதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் வியூகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுக-பாஜக கூட்டணி வெற்றிபெற்றால், தமிழகத்தின் அடுத்த துணை முதல்வராக எல். முருகனை அமர்த்த அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் ‘டபுள் என்ஜின்’ ஆட்சியை நிலைநாட்டவும், அதிகாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கவும் பாஜக இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. கூட்டணிக் கட்சிகளின் முழுமையான ஒத்துழைப்பு கிடைத்தால் எல். முருகனின் வெற்றி உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *